தங்கக் கடன் நிலையங்களில் நீண்ட வரிசையில் தவம் கிடந்த மக்கள் !

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், ​நகரங்களை நோக்கி மக்கள் ஓரளவுக்கு நேற்று (21) படையெடுத்திருந்தனர். ஒவ்வொரு கடைகள், வர்த்தக நிலையங்கள் ஏன், மதுபான சாலைகளுக்கு முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

அதனைவிடவும் தங்கக் கடன் நிலையங்களுக்கு முன்பாகவும் அடகு நிலையங்களுக்கு முன்பாகவும், மக்கள் நீண்ட வரிசையில் கால்கள் கடுக்க காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான உணவுப் பொருள்களை
கொள்வனவு செய்து ​கொள்வதற்கு கூட, எவ்விதமான வருமானமும் இன்றிருந்தவர்கள், தங்களுடைய காதுகள், மூக்கு, கழுத்தில் கிடந்தவற்றை அடகு வைப்பதற்கே பெரும்பாலும் காத்திருந்தனர் என ஒவ்வொரு புகைப்படங்களும் கதை சொல்கின்றன.

மாவட்டங்களில் மட்டுமன்றி, நாடளாவிய ரீதியிலுள்ள சகல நகரங்களிலும், தங்கக் கடன் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்