நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றையதினம் (செவ்வாய்க்கழமை) இடம்பெறவுள்ளன.

இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த நேற்று  இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய இன்றைய அமர்வில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் காணி எடுத்தல் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்கு விதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதேநேரம், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாளைய தினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.