நாட்டில் உர பற்றாக்குறை இல்லை-அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல

நாட்டில் உர பற்றாக்குறை எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இருப்பினும் நாட்டில் உர விநியோகம் தொடர்பாக ஒரு பிரச்சினை இருக்கலாம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

இதேவேளை அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 100,000 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்திருந்தார்.

நாட்டில் உர பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி ஹம்பாந்தோட்டையில் உள்ள மீகசர விவசாய சேவை நிலையத்திற்கு எதிரில் போராட்டம் இடமபெற்றது.

இந்த எதிர்ப்பு போராட்டம், விவசாய அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.