இரண்டரை வயது ஆண் குழந்தை கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலி

(க.கிஷாந்தன்)

 

இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் ஜனதா டிவிசனில் இடம்பெற்றுள்ளது.

 

ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.

 

குழந்தை திடீரன நேற்று மாலை முதல் காணாமல்போனதையடுத்து, அக்குழந்தையை தேடும் பணி இடம்பெற்றது. இதன்போது வீட்டுக்கு அருகில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாணிக் குழியில் இருந்து குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

 

சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

குழந்தையின் தாய் குருணாகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிகின்றார் எனவும், தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்ந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவமானது மஸ்கெலியா தோட்டப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்