தரமற்ற முகக்கவசங்களை விற்பனை செய்ய தடை !

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தரச்சான்றிதழ் அற்ற தரமற்ற முகக்கவசங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அணியப்படும் முகக்கவசத்திற்கு தரச்சான்றிதழ் கட்டாயமாகும் என அந்த அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்