மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தடை நீக்கம்
ஆறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு, கடந்த 14 நாட்களுக்குள் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள், இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று(30) முதல் நீக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அதிகார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரெய்ன் முதலான நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை