பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணி புறக்கணிப்பு.

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்திய சாலை தாதியர்களும் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG 20210701 085953

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டு வந்த தாதியர்கள் பணி புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலை நோக்கி வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

தூர பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த முதியவர்கள், தாய்மார்கள், உள்ளிட்ட பலரும் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.

முற்கூட்டியே இந்த பணிப்புறக்கணிப்பு தெரியாத காரணத்தினால் பணம் செலவழித்து, சிரமத்தின் மத்தியில் வைத்தியசாலைக்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்காது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்