மட்டக்களப்பில் இருந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொழும்பு வந்த 38 பயணிகளுடன் பயணித்த பஸ் மடக்கிப் பிடிப்பு !
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பேருந்தில் பயணித்த 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கிரேன்பாஸில் வைத்து குறித்த பேருந்து இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் பஸ்ஸில் பயணிகள் மோட்டார் சைக்கிள்களை கொண்டு வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை