சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வீடு கையளிப்பு
[வி.சுகிர்தகுமார்]
இதற்கமைவாக சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கான வீடுகளை மக்களின் பங்களிப்போடு அமைத்து கொடுத்தும் வருகின்றது.
இவ்வாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நாவற்காடு பிரதேசத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடானது ஜுலை மாதம் 01ஆம் திகதி முதல் ஜுலை 7ஆம் திகதிவரையாக அமுல்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா வாரத்திற்கு அமைவாக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவறுத்தலுக்கமைய சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இன்று இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி கலந்து கொண்டு வீட்டினை திறந்து வைத்தார்.
நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் ஆலையடிவேம்பு தெற்கு வலய முகாமையாளர் கே.அசோக்குமார் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெயந்தி வி.சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை