வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியமனம்!
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நேற்று(புதன்கிழமை) அவர் பெற்றுக்கொண்டார்.
கீத்நாத் காசிலிங்கம் பிரதமரின் இணைப்புச் செயலாளராகவும் அவர் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை