யாழில் சௌபாக்கிய உற்பத்திக் கிராமம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” என்ற திட்டத்தின்கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் விதமாக “சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன.

 

யாழ்ப்பாண மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்ப பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பாரம்பரிய முறையிலான எள்ளெண்ணை உற்பத்தி தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்தோடு பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலக செயலாளர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பிரான்பற்று கிராமத்தின் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்