குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில்
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் ஐவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்ட தேயிலை மலையில் இன்று (01) காலை 11 மணி அளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து அதில் இருந்த குளவிகள் கொட்டியுள்ளன.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை