மருதமுனைப் பிரதேசத்தை முடக்கும் தீர்மானம்  தறகாலிகமாக தளர்த்தபட்டுள்ளது

 

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதகாரி பிரிவில் உள்ள மருதமுனை பிரதேசத்தில்  கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வாரகாலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று (30) கல்முனை மாநகர சபைமுதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற

சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றைய தினமும்  (30) இன்றும்(01) மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையை கவனத்தில் கொண்டுமுடக்க நிலையை சுகாதார நிபந்தனைகளுடன் தற்காலியமாக தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர  சபைமுதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் இன்று (06) பிற்பகல்மாநகர அலுலக்த்தில்

இடம்பெற்ற சுகாதாரதுறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற  விசேட கலந்தரையாடலில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மருதமுனை பகுதியில் இறுக்கமான முறையில் கொரோனா நடைமுறைகள் பொது மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் பிரதேசத்தில்உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணியுடன் முடிவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதுடன்

தொடர்ந்தும் தீவிரமாக சுகாதார பிரிவினரால் குறித்த பிரதேசம் கண்காணிக்கபடவுள்ளதுடன் கொரோனா தொற்று நிலைமையின் பிரகாரம் மேலதிக நடவடக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்