நெடுந்தீவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவரே இன்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை