ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்கமைய, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மாத்திரமே சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி பிரதேச செயலகங்களில் உள்ள அடையாள அட்டை பிரிவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஏற்கனவே பதிவு செய்தவர்களின் அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவை மேற்கொள்ளலாம்

பத்தரமுல்லை பிரதான அலுவலகம் – 01152261126 / 0115226100

தென் மாகாண அலுவலகம் – 0912228348

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்