பிறந்தநாள் கொண்டாடிய 19பேர், விடுதியில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாடிய 19பேர், அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19பேர், அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதியில், நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸார், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக அவர்களை குற்றம் சாட்டி, அந்த விடுதியிலேயே  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்.

மேலும் நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும், பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்