யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இன்று சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று இன்று(03) பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு காலை 11.30 மணி தொடக்கம் மதியம் 1 மணிவரை இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்(புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்