மட்டக்களப்பு-ககுடாவெட்டை பகுதியில் யானை தாக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் கிராம சேவகர் பிரிவு ககுடாவெட்டை பகுதியில் நேற்று முற்பகல் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
குடாவெட்டை அண்டிய குளத்துக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து உயிரிழந்த நிலையில் உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டது.
ஈரல்குளம் குடாவெட்டை கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான கந்தன் நாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக பிற்பகல் இருந்து காலை வேளை வரையும் காட்டு யானைகளின் தொல்லை தொடர்ச்சியாக காணப்படுகின்றது.
உயிரிழந்தவர் தன்னுடைய பசுமாடுகளை பார்ப்பதற்காகச் சென்றவேளை காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின்போது உறவினர்கள் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி அப்பகுதி கிராம சேவை உத்தியோகத்தர் குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணையை பதிவு செய்தனர் .
உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காகவும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை