கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் எட்டு கடைகளுக்கு பூட்டு
கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முடிவுகள் நேற்று இரவு (03.07) வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதொச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், நவீன சந்தை தொகுதியில் 7 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த ஊழியர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை மற்றும் ஏனைய கடை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடைகளும் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை