எரிபொருள் கொண்டு செல்லும் தாங்கி ஊர்தியின் மூலம் கஞ்சாவைக் கடத்திய மூவர் சிக்கினர்!

எரிபொருள் கொண்டு செல்லும் தாங்கி ஊர்தியின் மூலம் கஞ்சாவைக் கடத்திய, தாங்கி ஊர்தி சாரதியும், உதவியாளர்கள் இருவரும் மீரிகம காவல்துறையின் விசேட குழுவொன்றினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய, கொழும்பு – கண்டி பிரதான வீதியில், வேவல்தெனிய பிரதேசத்தில் வைத்து நேற்று (3)மாலை குறித்த தாங்கி ஊர்தியுடன் சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாங்கி ஊர்தியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து ஒரு கிலோ 250 கிராம் நிறையுடைய கஞ்சா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக மீாிகம காவல்நிலைய பொறுப்பதிகாாி தொிவித்தார்.

சந்தேகநபர்கள் மூவரையும், அத்தனகலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவு பெற்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்