க பொ த .உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் இன்று முதல்இணையவழியில்…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும்
இன்று(05) முதல் இந்த புதிய நடைமுறை அமுலாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையொன்று அமுலில் இருக்கும்
“இணைய வழியாக மாத்திரமே,விண்ணப்பிக்க முடியும்” என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
உயர்தரப்பரீட்சையை , ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை