வேலணை துறையூர் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

யாழ்ப்பாணம்- வேலணை துறையூர் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கரை ஒதுங்கிய கடலாமையை இனங்கண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்திருந்தனர்.

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு,  நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கி இருந்தது.

குறித்த கடலாமையினையும் உடற்கூற்று பரிசோதனைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்