வடக்கில் நேற்று 36 கொவிட் தொற்றாளர்கள்; யாழில் பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணத்தில் 25 பேர், முல்லைத்தீவில் 10 பேர் உட்படவடக்கு மாகாணத்தில் நேற்று 36 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் 53 வயது பெண் ஒருவர் தொற்றால் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்தத் தகவல் வெளியானது.
இதன்படி, நேற்று யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேர், ஊர்காவற்றுறை மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேர், மானிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர், பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா 2 பேர், யாழ். போதனா மருத்துவமனையில் 3பேர், சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் என 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், யாழ். மாநகர மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்தார்.
இதேபோல, முல்லைத்தீவு மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேரும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 3 பேருமாக 10 பேர் தொற்றாளர்களாக இனங்
காணப்பட்டனர்.
மேலும் மன்னார் பொது மருத்துவமனையில் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்