நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்
நாடாளுமன்ற அமர்வை இன்று (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை யூலை மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை