யாழ் – அரியாலைப் பகுதியில் மணல் கொள்ளையர்களுடன் மோதல் ; நால்வருக்கு காயம்

யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கும் காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இன்று அதிகாலை மோதல் ஒன்று பதிவாகியுள்ளது.

இதில் நான்கு விசேட அதிரடிப் படையினர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.