டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளது-விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்
டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், நாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற சுகாதாரத் தரப்பின் போராட்டம் காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 












கருத்துக்களேதுமில்லை