கொரோனாவால் ஓய்வுநிலைப் பொறியியலாளரான சமூக சேவையாளர் லயன் தங்கவேல் மரணம்!

காரைதீவைச்சேர்ந்த பிரபல சமுகசேவையாளர் தேசமான்ய விபுலநேசன் லயன் சின்னதம்பி தங்கவேல் (வயது 75) கொரோனா காரணமாக நேற்று (5) திங்கட்கிழமை காலை காலமானார்.

ஓய்வுநிலைப் பொறியியலாளரான இவர் ,காரைதீவு விபுலாநந்தா ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஆலோசகராகவும், காரைதீவு ஓய்வூதியர்சங்கத்தின் தலைவராகவும் ,மற்றும் பல முன்னணி அமைப்புகளில் பிரதான பாகமெடுத்து சேவையாற்றி வந்தவராவார்.

‘தங்கவேல் மாமா’ என பலராலும் நன்கு அறியப்பட்ட இவர், கல்முனை லயன்ஸ் கழகத்திலும் ,பலசமுக அமைப்புகளிலும் கந்தசாமி ஆலயம் உள்ளிட்ட சமய நிறுவனங்களிலும் முன்னின்று பணியாற்றி வந்தவராவார்.

காரைதீவு பிரதேச சபை அபிவிருத்தி குழுவின் ஆலோசகசபை உறுப்பினரான இவர், விவேகானந்த விளையாட்டுக்கழகத்தின் முகாமையளராவார்.

கடந்தவாரம் கொரோனாத் தொற்றுக்கு இலக்கான இவர், கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுக்காலை சிகிச்சை பலனின்றி மரணமானார்.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனாவுக்கு பலியான நான்காவது மரணம் இவருடையதாகும். இவரது பிரேதம் அம்பாறையில் சுகாதாரமுறைப்படி நேற்று தகனம் செய்யப்பட்டது.

அதேவேளை ,அன்னாருக்கு ஆத்மார்த்த பிரார்த்தனையும் இறுதி அஞ்சலி நிகழ்வும் நேற்றுமாலை காரைதீவு விபுலாநந்த பணிமன்ற ஏற்பாட்டில் மணிமண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தகக்து.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்