ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றை மீண்டும் இம்மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மூவரங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறை ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் காரணமாக நீதித்துறை சேவை ஆணையகம் வெளியிட்ட சுற்றறிக்கை காரணமாக குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.