கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக கலைஞர்களுக்கான 10 ஆயிரம் ரூபா வழங்கும் பணி

[வி.சுகிர்தகுமார் ]

  அரசாங்கம் நாட்டில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தினையும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக உதவி அவசியமான கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 5 கலைஞர்களுக்கான 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கும் பணி இன்று இடம்பெற்றன.

சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தலுக்கமைய பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.கோகுலதாஸ் கிராம உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் காசோலைகள் கலைஞர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த கலைஞர்கள் கடந்த வருடமும் இவ்வாறு உதவித்தொகையினை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்