மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள காணியில் இன்று (புதன்கிழமை) காலை, விறகு எடுப்பதற்காகச் சென்ற கிராமவாசிகள் குறித்த கைக்குண்டுகளைக் கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார், குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்