மைத்திரியுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேற்படி சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, தனது பதவிக் காலத்தில் அமெரிக்கத் தூதுவர் வழங்கிய இராஜதந்திர ஒத்துழைப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்