கல்முனையில் சமுர்த்தி குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு
July 7th, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.
(எம். என். எம். அப்ராஸ்)
சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி பெறும் குடும்பங்களுக்குஇலவச மின்சார இணைப்பு கலமுனையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கமைய கல்முனை 12,13,14 ஆம் பிரிவுகளின் உள்ள சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பில் மின்சார இணைப்பு
பயனாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ் தலைமையில் இன்று (07)இடம்பெற்றது.
குறித்த மூன்று பிரிவில் உள்ள 08 சமூர்த்தி குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச சமுர்த்தி சிரேஸ்ட கருத்திட்ட முகாமையாளர் எம். எஸ். நயிமா உட்பட சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் எஸ். எல். அசீஸ் , பிரதேச கருத்திடட உதவியாளர் எ. எஸ். எம். ஜவ்பர்,சமுர்த்தி உத்தியோத்தர்களான எஸ். எம். சம்சுதீன்,எஸ். எச். பதூத் , எம் . ஜெமில் ஆகியோர் இதன் போது கலந்தகொண்டனர்.



கருத்துக்களேதுமில்லை