சீனாவின் பிடியில் வீழ்ந்துள்ள ஸ்ரீலங்கா!

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கையில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளமையானது, சீனாவின் பிடியில் எந்தளவுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வீழ்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சாட்சியாக உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேஷமூர்த்தி தெரிவித்தார்.

அதேநேரம், இந்த நாணய வெளியீட்டின் மூலம் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தை மேற்குலக நாடுகளுக்கு உணர்த்துவதையும் அறிந்துக் கொள்ள முடியும் என விரைவுரையாளர் சுட்டிக்காட்டினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. டி லக்ஷ்மன், ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இந்த நாணயக் குற்றிகளை நேற்றுமுன்தினம் கையளித்தார்.

எனினும் வெளிநாடொன்றின் அரசியல் கட்சிக்காக நாடொன்று நாணயக் குற்றிகளை வெளியிடுவது இதுவே முதன் முறை எனக் கூறப்படுகின்றது.

இலங்கையின் இறக்குமதி விடயங்களில் மாத்திரமே சீனாவின் தலையடு காணப்படுவதாக குறிப்பிட்ட விரிவுரையாளர், இலங்கையின் ஏற்றுமதி சந்தை என்பது மேற்குலக நாடுகளை சார்ந்தே காணப்படுவதால் விளைவுகளை பொறுத்திருந்தே அவதானிக்க முடியும் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்