முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கியபுள்ளிசுறா!
முல்லைத்தீவு அளம்பில் வடக்கு கடற்கரைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது.தென்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்த கப்பல் நீரில் மூழ்கியதை தொடர்ந்து நாட்டின் கரையோரப்பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. கடல் ஆமைகள்,சுறாக்கள்,டொல்பின்கள் போன்ற உயிரிழனங்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில் 07.07.21 அன்று முல்லைத்தீவு அளம்பில் வடக்கு கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் புள்ளி சுறா ஒன்று கரைஒதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீனவர்களினால் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்படத்தை தொடர்ந்து இன்று (08)காலை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சுறாவை வருகைதந்து பார்வையிட்டதோடு நீதிமன்ற அனுமதியை பெற்று தாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை