தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவருக்கு பொலிஸாரினால் அழைப்பானை

தமிழ்தேசிய முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனை காவற்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த காலங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு தன்னார்வாளர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் மஸ்கலிய பகுதியில் கொரோனா இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வவுனியாவில் பொருட்களை சேகரித்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஊடாக ப. தவபாலன் முன்னின்று வழங்கியிருந்தார்.
இவ்வாறான உதவியினை மேற்கொண்டமைக்காக குறித்த அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். பணியின் நிமித்தம் அவர் வெளியே சென்றிருந்த சமயம் அவரது வீட்டிற்கு சென்ற காவற்துறையினர் சிங்கள மொழியில் எழுதப்பட்ட அழைப்பானையினை வழங்கி 12.07.2021 காலை 9.30 மணிக்கு வருமாறும் கூறிச்சென்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்