தென்னங்கன்றுகள் நடும் தேசிய திட்டம் கல்முனையில் அங்குரார்பணம்

(எம்.என். எம்.அப்ராஸ்)

பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கை மேம்பாடுமற்றும் அவைசார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுஇணைந்து மேற்கொள்ளும் வீட்டுக்கு வீடு ‘கப்ருக’40 இலட்சம் தென்னங் கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்ட  அங்குரார்பண நிகழ்வு திகாமடுல்ல மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸின் நெறிப்படுத்தலில் இன்று கல்முனையில் (10) இடம்பெற்றது .

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ.பாவாதலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம் எஸ்.எம்.சத்தார், எம்.எஸ்.எம்.ஹாரீஸ், எம் எஸ்.எம்.நிசார், எம்.உமர் அலி, றோசன் அக்தர், காரைதீவு பிரதேச சபைஉறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், ஏ.ஆர்.எம். பஸ்மீர், மற்றும் அம்பாறை தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்தியமுகாமையாளரின்ஆலோசனைக்கமைவாக சம்மாந்துறை தென்னை  அபிவிருத்தி பிரிவின் தென்னை அபிவிருத்தி  உத்தியோகத்தர் ஏ.வி.எம்.நியாஸ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ்  கல்முனை தொகுதியில் 500 தென்னங் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்