மின் தடையால் 475,000 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 475,000 பேர் மின்சார தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக புத்தளம், குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடனான மழை காரணமாக மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.