பருத்தித்துறையில் 23 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெரிவில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், 2ஆம் குறுக்குத் தெருவில் 60 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையிலேயே 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை