தனிமைப்படுத்தல் முகாமில் கொத்தலாவல சட்டத்தை உடன் கிழித்தெறியுமாறு கோரி போராட்டம்!

கொத்தலாவல சட்டத்தை உடன் கிழித்தெறியுமாறு கோரி கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால்  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் நேற்று முன் தினம்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட  33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்படட நிலையில் இவர்களில் தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இன்று தனிமைப்படுத்தல் முகாமில் கொத்தலாவல சட்டத்தை உடன் கிழித்தெறியுமாறு கோரி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்