திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பாராம்பரிய உணவகம் திறந்துவைப்பு…

திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் 19 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாராம்பரிய உணவகமானது இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் திறந்து வைக்கப்பட்டது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின்   நிதி ஒதுக்கீட்டில் மாவட்ட செயலகத்தினால்  இது  நிர்மாணிக்கப்பட்டது. இப்பாரம்பரிய உணவகத்தை திருகோணமலை மாவட்ட மகளீர் சம்மேளனம் ஏற்று நடாத்துகின்றது.
இதன்மூலம் பெண்கள் தமது தயாரிப்பு உணவுகளை  விற்பனை செய்து வருமானத்தை ஈட்ட ஏதுவாக அமையும் என்பதோடு பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக இவ்வேலைத்திட்டம் அரசாங்க அதிபரின் வழிகாட்டலின்கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுடன் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்