அஸ்பர் உதுமாலெப்பை அவர்களின்  முயற்சியின் பலனாக   சம்மாந்துரை- மஜீத் புரம் வீதி புனரமைப்பு 

(எம். என். எம். அப்ராஸ்)
நாட்டின் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  சம்மாந்துறை தொகுதி முக்கியஸ்தகரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெப்பை அவர்களின்  முயற்சியின் பலனாக மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள  மஜீத்புரம்  பிரதேசத்திற்க்கு செல்லும் பிரதான வீதியானது
புனரமைக்கப்படவுள்ளது
வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஒரு லட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் சுமார் 5.5  அளவிலான கிலோமீட்டர் வீதி கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு  வீதியின் ஆரம்ப  வேலை திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன இந் நிலையில் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் அவர்கள் நேரடியாக மஜீத்புரத்திற்க்கு விஜயம்  செய்து நிலைமைகள்  தொடர்பில் பார்வையிட்டார்
அத்துடன் மிக நீண்ட காலமாக  குன்றும்  குழியுமாக, காணப்பட்ட இவ் வீதியின் அபிவிருத்தி தொடர்பில் மிகவும் கரிசனை செலுத்திய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெப்பை அவர்களுக்கு மஜீத்புர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் வீதியினால் போக்குவரத்து மேற்கொள்வோர் நன்றியினை தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்