முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 32வது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பண்ணாகத்தில் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவ சிலை அமைந்துள்ள இடத்தில் நடந்த இந்த நிகழ்வில், உருவச்சிலைக்கு முன்பாக சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.நடனேந்திரன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்