யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6015 ஆக அதிகரிப்பு

யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் இதுவரை 107 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 3604 குடும்பங்களை சேர்ந்த 10603 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்