திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி

திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்