காலைக்கதிருக்கு மாவையின் பதிலடி!

யாழ்ப்பாணம்
12.07.2021
ஆசிரியர்
காலைக்கதிர் ஏடு
யாழ்ப்பாணம்

வணக்கம்
“உண்மையற்ற பிரசாரம் தொடர்கிறது
பதிலளிக்க வேண்டிய பொறுப்பு”

தங்கள் 10.07.2021 வெளிவந்த பத்திரிகையில் “இனி வருவது இரகசியமல்ல தொடர் பந்தியில்ää மாவை சேனாதிராசா பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் பேசியவை தொடர்பில் உண்மைக்கு மாறான செய்திக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியுள்ளேன். பலரது வேண்டுகோளுக்கிணங்கவே இக் கடிதத்தை எழுதுகிறேன்.

இதற்கு முன்னரும் பல உண்மைக்கு மாறான செய்திகளுக்கு பதிலலித்திருக்கிறேன். ஆனாலும் 29.05.2021 மற்றும் 30.05.2021 காலைக்கதிரில் “மாவையின் வேணவா வீணவா ஆகும்” தலைப்பில் வெளியிட்ட கட்டுக்கதைக்கு பொருத்தமான வேளையில் பொருத்தமான வகையில் பதிலளிப்பேன். அந்த துன்பியல் நிகழ்வின் ஐந்து ஆண்டுகளின் பின் 2014ல் “கௌரி என்பவர்” எழுதிய உண்மைக்கு மாறான கட்டுக்கதைக்கு 2014 டிசம்பரில் பதிலெழுதியுள்ளேன். இப்பொழுதுää 30 ஆண்டுகளுக்குப் பின் அதே கதை இன்னும் திரிபுகளுடன் வெளிவந்திருக்கிறது. 14.12.2014 கதைக்கு எழுதிய உண்மைப் பதில் சென்ற சில வாரத்திற்கு முன்ää அண்மையில்தான் தேடி எடுத்துள்ளேன். தங்களுக்கும் தரலாம். அந்த உலகறிந்த உண்மைகள் தங்களுக்கும் நன்கு தெரியும்.
இப்பொழுது 10.07.2021 வெளிவந்த தங்கள் பத்திரிகைக் கதைக்கு வருகிறேன்;
“சென்ற 06.07.2021 மாலையிலும் அதற்கு முன் இரு தடவைகளிலும் திரு.சஜித் பிரேமதாசா கிளிநொச்சிää முல்லைத்தீவுää மன்னார் மருத்துவமனைகளுக்கத் தலா 2.3 மில்லியன் ரூபா மருத்துவ உபகரணங்கள் கொழும்பிலுள்;ள தமது கட்சி அலுவலகத்தில் கையளித்த வைபவத்திற்கு வருகைதருமாறு எனக்கும் அழைப்புக்கள் அனுப்பியுள்ளார். 05.07.2021 அன்று அவரிடமிருந்து வந்த செய்திகளுக்கு நான் யாழ்ப்பாணத்திலிருப்பதால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் எமது கட்சிப் பா.உ களிடம் கூறி அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன் என்ற பொழுதுதான் திரு.சஜித் பிரேமதாசாவிடம் பேசிய ஒரு நிமிடச் செய்தி யென்னவெனில் “பாராளுமன்றத்தில் உரையாற்றும் நேரத்தை எமது பா.உறுப்பினர் களுக்கு அரைமணி நேரமாவது கூடுதலாக ஒதுக்க வேண்டும்” என்பது மட்டும் தான். அவர் பதில்“நான் அதுபற்றி கவனிக்கிறேன்” என்பது மட்டும் தான்.
பாராளுமன்ற நடைமுறைகள் விவாதத்திற்கு நேரம் பகிர்ந்துகொள்ளும் முறை எனக்கும் நன்கு தெரியும். சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தான் ஆளும் கட்சிக்கு எவ்வளவு நேரம் எதிர் கட்சிக்கு எவ்வளவு நேரம் என ஒதுக்கப்படும். எதிர்க் கட்சி தலைமை தான் ஏனைய எதிர்க் கட்சிகளுக்கு நேரத்தை பங்கிடுவது வழமை. நேரம் போதாது என்றால் அவர்களிடம் தான் கேட்டுப்பெறுவது வழமை.
த.தே.கூட்டமைப்பின் தலைவர்களான திருவாளர்கள் சித்தார்த்தன் பா.உ செல்வம் அடைக்கலநாதன் பா.உ ஆகியோர் தங்களுக்குப் பாராளுமன்றில் பேசுவதற்கு அவகாசம் நேரம் கிடைப்பதில் பாகுபாடுள்ளதால் தாம் சபாநாயகரிடம் நேரடியாகப் பேசப் போவதாக நேரில் என்னிடம் தெரிவித்தனர். “அவ்வாறு செய்ய வேண்டாம்நான் இதுபற்றி ஒழுங்கு செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்திருந்தேன்.” அதனால் தான் திரு.சஜித் பிரேமதாசவிடம் தொலைபேசியில் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு நிமிடத்தில் பேசிவிட்டேன். எங்கள் தரப்பில் யாருடைய பெயரைக் கூட உச்சரிக்கவில்லை.
திரு.லக்ஸ்மன் கிரியெல்லவிடம் சென்ற பாராளுமன்றக் காலத்தைவிட இன்றுவரையில் நேரிலோ தொலைபேசியிலோ பேசியதேயில்லை. இது தான் உண்மை.
நான் திரு.லக்ஸ்மன் கிரியெல்லையுடன் பேசினேன் என்ற கட்டுக்கதையும் செய்தியும் அதைத் தொடர்ந்து 11.07.2021லும் வெளிவந்த செய்திகளும் குழப்பமான கருத்துக்களாகும். தங்களின் மேற்கண்டவாறு செய்திகள் பொய்யான செய்தி என 10.07.2021 மாலையில் திரு.சுமந்திரனிடம் நான் கூறியிருக்கிறேன்.
கொரோணா வைரஸ் தொற்றினால் மக்கள் உயிர்கள் பலியாகுவதும் மக்கள் துயரத்தில் வீழ்ந்து கிடப்பதுமான பெரும் துயரத்தில் இவ்வாறான பொய்கள் எனக்கு எதிராகவும் தமிழரசுக் கட்சியைச் சீர்குலைக்கவும் எடுக்கும் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டி வந்தமையையிட்டு மனம் வருந்துகிறேன்.

மாவை.சோ.சேனாதிராசா.
தலைவர் இ.த.அ.கட்சி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்