நிரந்தரமாக்க கோரி கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள்போராட்டம்!

[நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம். சினாஸ்]

அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் இன்று (14) நண்பகல் உணவு விடுமுறை காலப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்றலில் சுலோகங்களை ஏந்தி சமூக இடைவெளியுடன் சுகாதார நடைமுறைகளை பேணி இடம்பெற்ற இந்த போராட்டத்தில் கருத்து தெரிவித்த அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய தலைவர் கடந்த பல வருடங்களாக டெங்கு தடுப்பு உதவியாளர்களாக கடமையாற்றும் எங்களை அரசினால் புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் பல்தேவை செயலணியில் சேர்க்க உள்ளதாக அறிகிறோம். அதனை எங்களால் ஏற்று கொள்ள முடியாது. சுகாதார அமைச்சின் சுகாதார திணைக்களத்தின் கீழ் எங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் பல்வேறு முக்கிய அதிகாரிகளுக்கு எங்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் இதுவரை எங்களுக்கான தீர்வு கிட்டவில்லை. விரைவில் அரசாங்கம் எங்களுக்கான நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்