நாளை திருகோணமலை மாவட்டத்தில் 12 மணி நேர நீர் வெட்டு

[ஹஸ்பர் ஏ ஹலீம்]
அவசர பிரதான நீர் குழாய் திருத்த வேலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் குழாய் நீர் வெட்டு 12 மணி நேரம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜெயந்தன் தெரிவித்தார். குறித்த நீர் வெட்டானது நாளை (15) வியாழக் கிழமை  காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை கண்டி பிரதான வீதி முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள பிரதான குழாய் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மூலமான நீர் கசிவு ஏற்பட்டதை அடுத்து திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் துண்டிக்கப்படும் எனவும் இது கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை நகர், நிலாவெளி,ஆண்டாங்குளம், பாலைஊற்று ,சீனக்குடா ஆகிய பகுதிகளில் குறித்த குழாய் நீர் துண்டிக்கப்படும் எனவும் இதனால் நீரை சேமித்து வைக்குமாறும் பிராந்திய முகாமையாளர் மேலும் பொது மக்களை கேட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்