வல்வெட்டித்துறையில் 48 பேருக்கு கோரோனா!

வல்வெட்டித்துறையில் இன்று 38 பேர் உட்பட இரண்டு நாள்களில் 48 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இன்று 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் 32 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய தினம் 9 பேருக்கு தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்