நாட்டில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் பலி

நாட்டில் நேற்று மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த 9 மரணங்களும் மோட்டார் சைக்கிள் மூலம் விபத்துக்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3000 பேர் வரை அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்