பருத்தித்துறை பொதுச் சந்தையில் ஐவருக்கு கொரோனா

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலேயே ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர் .

இதனையடுத்து, பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிப்பதா என்பது தொடர்பில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்